Families embrace at a feast as oil is poured upon a priest before Mount Hermon

சங்கீதம் 133

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
அத்தியாய சுருக்கம்
சங்கீதம் 133 சமூக ஒற்றுமையை விலைமதிப்பற்றதாகவும், ஏராளமாகவும், வாழ்க்கையளிக்கும் தன்மையுடனும் கொண்டாடுகிறது. நறுமணமுள்ள அபிஷேக எண்ணெயும் புத்துணர்ச்சியூட்டும் மலை பனியும் தனிநபர்களை மிஞ்சி பாய்ந்து பலதரப்பட்ட உடன்படிக்கை குடும்பத்தை ஒன்றாக்கும் ஆசீர்வாதத்தை சித்தரிக்கின்றன.
ஒற்றுமைஅபிஷேகம்ஆசீர்வாதம்சமூகம்
1இறைவனின் மக்கள் ஒற்றுமையுடன் ஒருமித்து வாழ்வது எவ்வளவு நல்லதும், எவ்வளவு மகிழ்ச்சிக்குரியதுமாய் இருக்கிறது!
2அது தலையில் ஊற்றப்பட்டு தாடியில் வடிகின்ற விலையேறப்பெற்ற எண்ணெய்போல் இருக்கிறது; ஆரோனின் தாடியில் வடிந்து, அவனுடைய அங்கிகளின் கழுத்துப்பட்டியில் இறங்கும் எண்ணெய்போல் இருக்கிறது.
3எர்மோன் மலையின் பனி சீயோனின் மலைகள்மேல் இறங்குவதைப்போல் அது இருக்கிறது; ஏனெனில் அங்கே யெகோவா தமது ஆசீர்வாதத்தை வழங்குகிறார்; வாழ்வையும் என்றென்றைக்கும் வழங்குகிறார்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.