
சங்கீதம் 124
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
அத்தியாய சுருக்கம்
சங்கீதம் 124 தெய்வீக உதவி இல்லாமல் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்கிறது: எதிரிகள், கோபம், வெள்ளம், பற்கள் மக்களை விழுங்கியிருக்கும். அதற்கு பதிலாக, இரை உடைந்த பொறியிலிருந்து தப்பித்து, நன்றியுடன் தன் மீட்பரின் பெயரைச் சொல்கிறது.
தப்பித்தல்உதவிஆபத்துநன்றி
1யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால், இதை இஸ்ரயேலர் சொல்லட்டும்:
2மனிதர் நம்மை தாக்கும்போது யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
3அவர்கள் கோபம் நமக்கு எதிராகப் பற்றியெரிந்தபோது, அவர்கள் நம்மை உயிருடன் விழுங்கியிருப்பார்களே;
4வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்குமே, நீரோட்டம் நம்மீது புரண்டு ஓடியிருக்குமே,
5பொங்கி வந்த வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்குமே.
6அவர்கள் நம்மை பற்களால் கிழித்துப்போட இடமளிக்காத யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்.
7வேடனுடைய கண்ணியிலிருந்து தப்பின பறவையைப்போல் நாம் தப்பிப் பிழைத்தோம்; கண்ணி அறுந்தது, நாம் தப்பினோம்.
8வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவினுடைய பெயரிலே நமக்கு உதவி உண்டு.
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.