Jerusalem rests among encircling mountains as families flourish inside and shadowed rulers approach outside

சங்கீதம் 125

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
அத்தியாய சுருக்கம்
சங்கீதம் 125 நம்பிக்கையுள்ள மக்களை அசைக்க முடியாத சீயோன் மலையுடனும், சுற்றியுள்ள பாதுகாப்பை எருசலேமின் மலைகளுடனும் ஒப்பிடுகிறது. ஒடுக்கும் ஆட்சி என்றும் நிலைக்காது; நேர்மை ஊக்குவிக்கப்படுகிறது, கோணலான பாதைகள் நிராகரிக்கப்படுகின்றன, சமாதானம் ஜெபத்தை முடிக்கிறது.
சீயோன்உறுதிபாதுகாப்புசமாதானம்
1யெகோவாவை நம்புகிறவர்கள் சீயோன் மலையைப்போல் என்றென்றும் அசையாமல் நிலைத்திருப்பார்கள்.
2மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருப்பதைப்போல், யெகோவா இப்பொழுதும் எப்பொழுதும் தமது மக்களைச் சுற்றியிருக்கிறார்.
3நீதிமான்களுக்கென ஒதுக்கப்பட்ட நாட்டின்மேல், கொடியவர்களின் ஆட்சி நீடிக்காது; இல்லையெனில், நீதியற்றவர்களும் தீமைசெய்யத் தங்கள் கைகளை நீட்டலாம்.
4யெகோவாவே, நல்லவர்களுக்கு, இருதயத்தில் நேர்மையாய் இருப்போருக்கு நன்மை செய்யும்.
5குறுக்கு வழிகளுக்குத் திரும்புகிறவர்களையோ, யெகோவா தீயவரோடேகூட தண்டிப்பார். இஸ்ரயேலின்மீது சமாதானம் உண்டாவதாக.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.