
சங்கீதம் 123
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
அத்தியாய சுருக்கம்
சங்கீதம் 123 எஜமானரின் கையைப் பார்க்கும் ஊழியர்களின் கவனத்துடன் மேல்நோக்கி திரும்புகிறது. கேலியாலும் திமிர்பிடித்த இகழ்ச்சியாலும் நிரம்பிய சோர்வான சமூகம் பணிவுடன், கவனமுள்ளதாக, தொடர்ந்து தேவையான இரக்கத்திற்காக காத்திருக்கிறது.
இரக்கம்சார்ந்திருத்தல்இகழ்ச்சிஜெபம்
1பரலோகத்தின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறவரே, நான் உம்மை நோக்கி என் கண்களை உயர்த்தி மன்றாடுகிறேன்.
2அடிமைகளின் கண்கள் தங்கள் எஜமானுடைய கரத்தை நோக்கிப் பார்ப்பதுபோலவும், அடிமைப்பெண்ணின் கண்கள் தன் எஜமாட்டியினுடைய கரத்தை நோக்கிப் பார்ப்பதுபோலவும், எங்கள் கண்களும் எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்கு இரக்கம் காண்பிக்கும்வரை, அவரையே நோக்கிப்பார்க்கின்றன.
3எங்கள்மேல் இரக்கமாயிரும், யெகோவாவே, எங்கள்மேல் இரக்கமாயிரும்; அதிகமான அவமதிப்பை நாங்கள் சகித்துக்கொண்டோம்.
4பெருமைக்காரரின் ஏளனத்தையும், அகங்காரம் கொண்டவர்களின் அதிகமான அவமதிப்பையும் நாங்கள் சகித்துக்கொண்டோம்.
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.