
சங்கீதம் 131
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
அத்தியாய சுருக்கம்
சங்கீதம் 131 பெருமையையும், பெரிய லட்சியத்தையும், அமைதியான சார்ந்திருத்தலுக்கான தளர்வற்ற ஆசையையும் நிராகரிக்கிறது. பேச்சாளனின் உள் வாழ்க்கை தன் தாயுடன் திருப்தியுடன் ஓய்வெடுக்கும் பால்குடி மறந்த குழந்தை போல மாறி, சமூகத்தை நீடித்த நம்பிக்கைக்கு அழைக்கிறது.
பணிவுதிருப்திநம்பிக்கைஎதிர்பார்ப்பு
1யெகோவாவே, என் இருதயம் பெருமையுள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையானவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சிய செயல்களிலும் நான் ஈடுபடுவதில்லை.
2பால் மறந்த குழந்தை தன் தாயின் மடியில் இருப்பதுபோல், என் ஆத்துமாவை நான் அடக்கி அமைதியாக்கினேன்; என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது.
3இஸ்ரயேலே, இப்பொழுதும் எப்பொழுதும் யெகோவாவிலேயே உன் நம்பிக்கையை வைத்திரு.
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.