Families from many lands gather with musicians and dancers inside Jerusalem's open gates

சங்கீதம் 87

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
அத்தியாய சுருக்கம்
சங்கீதம் 87 சீயோனை அதன் குடியுரிமை ஆச்சரியமாக விரிவடையும் ஒரு அன்பான அடித்தளமாக துதிக்கிறது. முன்னாள் வெளியாட்களும் தொலைதூர மக்களும் இயல்பாகப் பிறந்தவர்களாக எண்ணப்படுகிறார்கள், பாடகர்களும் நடனமாடுபவர்களும் நகரத்தை பகிரப்பட்ட மூலமாக கொண்டாடுகிறார்கள்.
சீயோன்தேசங்கள்சொந்தம்கொண்டாட்டம்
1யெகோவா தமது அஸ்திபாரத்தைப் பரிசுத்த மலையில் அமைத்திருக்கிறார்.
2யெகோவா யாக்கோபிலுள்ள எல்லா வாழ்விடங்களைப் பார்க்கிலும், சீயோனின் வாசல்களை நேசிக்கிறார்.
3இறைவனின் நகரமே, உன்னைக்குறித்து மகிமையான காரியங்கள் சொல்லப்படுகின்றன:
4“என்னை ஏற்றுக்கொள்ளுகிறவர்களோடு நான் ராகாபையும் பாபிலோனையும் குறித்து, ‘இவர்கள் சீயோனிலே பிறந்தவர்கள்’ என்று சொல்வேன்; பெலிஸ்தியாவையும் தீருவையும் எத்தியோப்பியாவையும் குறித்தும் அப்படியே சொல்வேன்.”
5உண்மையாகவே சீயோனைக் குறித்து, “இன்னார் இன்னார் அங்கே பிறந்தார்கள் என்றும், மகா உன்னதமானவர் தாமே அதை நிலைநிறுத்துவார்” என்றும் சொல்லப்படும்.
6“இன்னார் சீயோனிலே பிறந்தார்” என்பதாக யெகோவா மக்களின் பதிவேட்டில் எழுதுவார்.
7அவர்கள் இசை மீட்டும்பொழுது, “எங்கள் ஊற்றுகள் எல்லாம் உம்மிலேயே இருக்கிறது” என்று பாடுவார்கள்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.