
சங்கீதம் 82
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
அத்தியாய சுருக்கம்
சங்கீதம் 82 பலவீனர், அனாதைகள், ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கும்போது தீயவர்களை ஆதரிக்கும் ஆட்சியாளர்களை குற்றம் சாட்டுகிறது. அவர்களது அநீதி சமூகத்தின் அடித்தளங்களை அசைக்கிறது, உண்மையான நீதிபதி சரியான ஒழுங்கை மீட்டமைக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறது.
நீதிபாதிக்கப்படக்கூடியவர்கள்நியாயத்தீர்ப்புதலைமை
1மகா சபையிலே இறைவன் தலைமை வகிக்கிறார்; “கடவுள்களுக்கு” நடுவிலே அவர் தீர்ப்பு வழங்குகிறார்:
2“நீங்கள் எதுவரைக்கும் அநீதியான தீர்ப்பு வழங்கி, கொடியவர்களுக்குப் பாரபட்சம் காட்டுவீர்கள்?
3பலவீனருக்கும், தந்தையற்றோருக்கும் நீதி வழங்குங்கள்; ஏழைகளுடைய ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்குப் பாதுகாப்பளியுங்கள்.
4பலவீனரையும் ஏழைகளையும் தப்புவியுங்கள்; அவர்களைக் கொடியவர்களின் கையிலிருந்து விடுவியுங்கள்.
5“அவர்கள் எதையும் அறியாமலும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறார்கள்; அவர்கள் இருளிலேயே நடக்கிறார்கள்; பூமியின் அடித்தளங்கள் எல்லாம் அசைக்கப்படுகின்றன.
6“ ‘நீங்கள் “தெய்வங்கள்” என்றும்; நீங்கள் எல்லோருமே மகா உன்னதமானவரின் மகன்கள்’ என்றும் நான் சொன்னேன்.
7ஆனாலும், நீங்கள் சாதாரண மனிதர்களைப் போலவே சாவீர்கள்; மற்ற எல்லா ஆளுநர்களையும் போலவே நீங்களும் விழுவீர்கள்.”
8இறைவனே எழுந்தருளும், பூமியை நியாயம் தீர்த்தருளும்; ஏனெனில் எல்லா நாட்டு மக்களும் உமது உரிமைச்சொத்தே.
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.