
சங்கீதம் 76
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
அத்தியாய சுருக்கம்
சங்கீதம் 76 யூதாவில் அறியப்பட்ட கடவுளை ஒவ்வொரு போர் ஆயுதத்தையும் மிஞ்சும் மகிமையானவராக கொண்டாடுகிறது. ஆட்சியாளர்களை மவுனமாக்கும் பயங்கரமான வல்லமையே சமாதானத்தையும் நிலைநாட்டுகிறது, வழிபாட்டாளர்களை பயபக்தியுடன் பொருத்தனைகளை நிறைவேற்றச் செய்கிறது.
சமாதானம்நியாயத்தீர்ப்புவழிபாடுவெற்றி
1யூதாவில் இறைவன் அறியப்பட்டிருக்கிறார்; இஸ்ரயேலில் அவருடைய பெயர் பெரியது.
2அவருடைய கூடாரம் சாலேமில் இருக்கிறது; அவருடைய தங்குமிடம் சீயோனில் இருக்கிறது.
3அங்கே அவர் தீப்பிழம்போடு பாயும் அம்புகளையும், கேடயங்களையும், வாள்களையும், போராயுதங்களையும் உடைத்தார்.
4நீர் ஒளியுள்ளவராய்த் துலங்குகிறீர்; வேட்டையாடும் மலைகளைப் பார்க்கிலும் அதிக கம்பீரமுடையவராய் இருக்கிறீர்.
5வீரமுள்ள மனிதர் கொள்ளையிடப்பட்டு, அவர்கள் மரண நித்திரை அடைந்தார்கள்; போர்வீரரில் ஒருவனும் தன் கைகளை உயர்த்த முடியாமலிருக்கிறான்.
6யாக்கோபின் இறைவனே, உமது கோபத்தில் குதிரை, தேர் இரண்டுமே செயலிழந்து கிடக்கின்றன.
7நீரே, நீர் ஒருவருரே பயப்படத்தக்கவர்; நீர் கோபமாய் இருக்கும்போது உம்முன் யாரால் நிற்கமுடியும்?
8நீர் வானத்திலிருந்து நியாயத்தீர்ப்பை வழங்கினீர்; பூமி பயந்து அமைதியாய் இருந்தது.
9இறைவனே, நாட்டில் துன்புற்ற யாவரையும் காப்பாற்றுவதற்காக நீர் எழுந்தபோதே, அந்த நியாயத்தீர்ப்பை வழங்கினீர்.
10நிச்சயமாகவே, மனிதருக்கு விரோதமான உமது கோபம் உமக்குத் துதியைக் கொண்டுவருகிறது; உமது கடுங்கோபத்திற்குத் தப்பி மீந்தவர்களை நீர் அடக்குவீர்.
11உங்கள் யெகோவாவாகிய இறைவனுக்கு நேர்த்திக் கடன்களைச் செய்து, அவைகளை நிறைவேற்றுங்கள். அவரைச் சுற்றியிருக்கிற நாடுகளெல்லாம் பயப்படத்தக்கவரான அவருக்கே அன்பளிப்புகளைக் கொண்டுவரட்டும்.
12அவர் ஆளுநர்களின் ஆவியை நொறுக்குகிறார்; பூமியின் அரசர்கள் அவருக்குப் பயப்படுகிறார்கள்.
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.