A vulnerable traveler cries urgently while hostile pursuers falter and friends rush to provide aid

சங்கீதம் 70

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
அத்தியாய சுருக்கம்
சங்கீதம் 70 நெருக்கடியை ஓர் அவசர வேண்டுகோளாக சுருக்குகிறது: உதவிக்கு விரைந்து வா. மனுதாரன் தீங்கிழைக்கும் துரத்துபவர்கள் திரும்பவும், தேடுபவர்கள் மகிழவும், இரட்சிப்பை நேசிப்பவர்கள் தொடர்ந்து துதிக்கவும் கேட்கிறான், அதே நேரத்தில் ஏழை இன்னும் மீட்புக்காக காத்திருக்கிறான்.
அவசரம்மீட்புபணிவுமகிழ்ச்சி
1இறைவனே, என்னைக் காப்பாற்ற விரைவாய் வாரும்; யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும்.
2என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் குழப்பமடைவார்களாக; எனது அழிவை விரும்புகிற யாவரும் அவமானமடைந்து திரும்புவார்களாக.
3என்னைப் பார்த்து, “ஆ! ஆ!” என்று ஏளனம் செய்கிறவர்கள், அவர்களுடைய வெட்கத்தினால் திரும்புவார்களாக.
4ஆனால் உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து களிகூருவார்களாக; உமது இரட்சிப்பை விரும்புவோர், “இறைவன் பெரியவர்!” என்று எப்போதும் சொல்வார்களாக.
5நானோ, ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்; இறைவனே, என்னிடம் விரைந்து வாரும். நீரே என் துணை, நீரே என் மீட்பர்; யெகோவாவே, தாமதியாதேயும்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.