Families from many nations share a rich harvest and praise together beneath a bright peaceful sky

சங்கீதம் 67

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
அத்தியாய சுருக்கம்
சங்கீதம் 67 எல்லா தேசங்களும் கடவுளின் இரட்சிக்கும் வழியை அறிய தெய்வீக ஆசீர்வாதத்தைக் கேட்கிறது. நீதியான வழிநடத்துதல் மக்களுக்கு மகிழ்ச்சிக்கான காரணத்தை அளிக்கிறது, பூமி அதன் அறுவடையை கொடுக்கிறது, பெறப்பட்ட ஏராளம் உலகின் தொலைதூர எல்லைகள் வரை சாட்சியாக மாறுகிறது.
தேசங்கள்ஆசீர்வாதம்நீதிஅறுவடை
1இறைவன் நம்மேல் கிருபையாயிருந்து நம்மை ஆசீர்வதிப்பாராக; அவர் தமது முகத்தை நம்மீது பிரகாசிக்கச் செய்வாராக.
2இறைவனே, உமது வழிகள் பூமியிலும், உமது இரட்சிப்பு எல்லா நாடுகளுக்கு மத்தியிலும் அறியப்படும்.
3இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.
4நீர் மக்கள் கூட்டத்தை நீதியாய் ஆட்சிசெய்து, பூமியின் நாடுகளுக்கு வழிகாட்டுவதால், மக்கள் மகிழ்ந்து களிப்புடன் பாடுவார்களாக.
5இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.
6அப்பொழுது நிலம் விளைச்சலைக் கொடுக்கும்; இறைவனாகிய எங்கள் இறைவனே எங்களை ஆசீர்வதிப்பார்.
7இறைவன் எங்களை இன்னும் ஆசீர்வதிப்பார்; ஆகையால் பூமியின் எல்லைகளில் உள்ளவர்கள் எல்லோரும் அவருக்குப் பயப்படுவார்கள்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.