Trumpets, harps, lyres, drums, flutes, cymbals, dancers, families, and animals celebrate at sunrise

சங்கீதம் 150

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
அத்தியாய சுருக்கம்
சங்கீதம் 150 செறிவான, எல்லையற்ற துதியுடன் சங்கீத புத்தகத்தை முடிக்கிறது. பரிசுத்த ஸ்தலமும் வானமும், வல்லமையான செயல்களும் மிஞ்சும் மகத்துவமும், எக்காளமும் நரம்புக் கருவிகளும், தாளமும் தாளக்கருவிகளும், நடனமும் மூச்சுவிடும் ஒவ்வொரு உயிரினமும் ஒரே இறுதி குழுவை உருவாக்குகின்றன.
துதிஇசைபரிசுத்த ஸ்தலம்படைப்பு
1அல்லேலூயா, இறைவனை அவருடைய பரிசுத்த இடத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை வெளிப்படும் வானங்களில் அவரைத் துதியுங்கள்.
2அவருடைய வல்லமையின் செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்; இணையற்ற அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
3எக்காள சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; யாழோடும், வீணையோடும் அவரைத் துதியுங்கள்.
4தம்புராவுடன் நடனமாடி அவரைத் துதியுங்கள்; கம்பியிசைக் கருவிகளினாலும், புல்லாங்குழலினாலும் அவரைத் துதியுங்கள்.
5கைத்தாளங்களின் ஓசையுடன் அவரைத் துதியுங்கள்; அதிர்ந்து ஒலிக்கும் கைத்தாளங்களுடன் அவரைத் துதியுங்கள்.
6சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக. அல்லேலூயா.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.