
சங்கீதம் 129
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
அத்தியாய சுருக்கம்
சங்கீதம் 129 இஸ்ரவேலின் இளமையிலிருந்து மீண்டும் மீண்டும் வந்த ஒடுக்குமுறையை நினைவுகூர்கிறது, அதற்கு இறுதி வார்த்தையை கொடுக்காமல். ஆழமான காயங்கள் காணப்படுகின்றன, ஆனால் கட்டும் கயிறுகள் அறுக்கப்படுகின்றன, சுரண்டுபவர்கள் ஆழமற்ற கூரை புல்லைப் போல தற்காலிகமாகிறார்கள்.
ஒடுக்குமுறைஉயிர்வாழ்தல்நீதிசுதந்திரம்
1“என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள்” என்று இஸ்ரயேலர் சொல்லட்டும்;
2“என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள், ஆனாலும் அவர்களால் என்மேல் வெற்றிகொள்ள முடியவில்லை.
3உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள்.
4ஆனாலும் யெகோவா நீதியுள்ளவர்; அவர் கொடியவர்களின் கட்டுகளை அறுத்து, என்னை விடுதலையாக்கினார்.”
5சீயோனை வெறுக்கிற அனைவரும் வெட்கப்பட்டுத் திரும்பிப் போகட்டும்.
6அவர்கள் வீட்டுக்கூரையில் முளைக்கும் புல்லைப்போல் ஆகட்டும்; அது வளரும் முன்பு வாடிப்போகுமே.
7அறுவடை செய்கிறவன் அவற்றால் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது; அவற்றைச் சேர்க்கிறவனும் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது.
8வழிப்போக்கர்கள் அவர்களிடம், “யெகோவாவின் ஆசீர்வாதம் உங்கள்மேல் இருக்கட்டும்; யெகோவாவின் பெயரினால் நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம்” என்றும் சொல்லாதிருக்கட்டும்.
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.