
சங்கீதம் 121
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
அத்தியாய சுருக்கம்
சங்கீதம் 121 யாத்திரிகனின் கண்களை மலைகளுக்கு அப்பால் ஒருபோதும் உறங்காத படைப்பாளரையும் காவலரையும் நோக்கி உயர்த்துகிறது. நிழல், விழிப்புள்ள பிரசன்னம், முழுமையான பாதுகாப்பு ஒவ்வொரு அடியிலும், புறப்பாட்டிலும், திரும்புதலிலும் இப்போதும் எதிர்காலத்திலும் உடன் வருகின்றன.
பாதுகாப்புயாத்திரைநம்பிக்கைகாவலர்
1மலைகளுக்கு நேராக என் கண்களை உயர்த்துகிறேன். எங்கிருந்து எனக்கு உதவி வரும்?
2வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவிடமிருந்தே, எனக்கு உதவி வரும்.
3அவர் உன் காலைச் சறுக்கவிடமாட்டார்; உன்னைக் காக்கும் அவர் உறங்கமாட்டார்.
4இதோ, இஸ்ரயேலைக் காக்கிறவர், உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.
5யெகோவா உன்னைக் காக்கிறவர்; யெகோவா உன் வலப்பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார்.
6பகலில் சூரியனோ, இரவில் சந்திரனோ உனக்குத் தீங்கு செய்யாது.
7யெகோவா உன்னை எல்லாத் தீங்கிலிருந்தும் காப்பார்; அவர் உன் வாழ்வைக் காப்பார்.
8யெகோவா உன் போக்கையும் வரத்தையும் இப்பொழுதும் எப்பொழுதும் காப்பார்.
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.