
சங்கீதம் 113
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
அத்தியாய சுருக்கம்
சங்கீதம் 113 சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரையும், வானத்தின் உயரங்கள் முதல் சமூகத்தின் தாழ்ந்த இடங்கள் வரையும் துதியை நீட்டிக்கிறது. ஏழைகள் கண்ணியத்தைப் பெறுகிறார்கள், தேவையுள்ளவர்கள் மரியாதைக்குரிய நிறுவனத்தைப் பகிர்கிறார்கள், குழந்தையற்ற பெண் குடும்பத்தில் மகிழ்கிறாள்.
துதிகண்ணியம்ஏழைகுடும்பம்
1அல்லேலூயா, யெகோவாவின் பணியாட்களே, துதியுங்கள்; யெகோவாவினுடைய பெயரைத் துதியுங்கள்.
2யெகோவாவின் பெயர் இப்பொழுதும், எப்பொழுதும் துதிக்கப்படட்டும்.
3சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து அது மறையும் இடம்வரை யெகோவாவினுடைய பெயர் துதிக்கப்படட்டும்.
4யெகோவா எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலாக இருக்கிறது.
5நம்முடைய இறைவனாகிய யெகோவாவைப்போல் யாருண்டு? உன்னதத்தின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற அவரைப்போல் யார் உண்டு?
6வானங்களையும் பூமியையும் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிற அவரைப்போல் யாருண்டு?
7அவர் ஏழைகளைத் தூசியிலிருந்து உயர்த்துகிறார், எளியவர்களைச் சாம்பற் குவியலில் இருந்து தூக்கிவிடுகிறார்.
8அவர் தமது மக்களைப் பிரபுக்களோடு அமரப்பண்ணுகிறார்.
9அவர் பிள்ளைப்பேறற்ற பெண்ணை பிள்ளைகளைப் பெறும் மகிழ்ச்சியுள்ள தாயாக்கி, அவளுடைய வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். அல்லேலூயா.
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.