
சங்கீதம் 111
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
அத்தியாய சுருக்கம்
சங்கீதம் 111 மகிமையான செயல்கள், தயவான ஏற்பாடு, உடன்படிக்கை உண்மை, நீடித்த நீதியை துதிக்கிறது. கவனமான சமூக நினைவு பயபக்தியான ஞானத்திற்கும், பயிற்சிபெற்ற புரிதலுக்கும், ஒரு தலைமுறையை மிஞ்சி தொடரும் நன்றியுள்ள துதிக்கும் வழிநடத்துகிறது.
செயல்கள்உடன்படிக்கைஞானம்துதி
1அல்லேலூயா, நீதிமான்களின் கூட்டத்திலும் சபையிலும் நான் முழு இருதயத்தோடும் யெகோவாவைப் புகழ்வேன்.
2யெகோவாவின் செயல்கள் மகத்தானவை; அவைகளால் மகிழ்ச்சியடையும் எல்லோராலும் அவை சிந்திக்கப்படுகின்றன.
3அவருடைய செயல்கள் மகிமையும், மகத்துவமுமானவை; அவருடைய நீதி என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது.
4அவர் தமது அதிசய செயல்களை நமது நினைவை விட்டு விலகாதபடிச் செய்திருக்கிறார்; யெகோவா கிருபையும், கருணையும் உள்ளவராய் இருக்கிறார்.
5அவர் தமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு உணவு கொடுக்கிறார்; அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் வைத்திருக்கிறார்.
6அவர் பிற நாடுகளைத் தம் மக்களுக்குக் கொடுத்து, தமது வல்லமையை அவர்களுக்குக் காண்பித்திருக்கிறார்.
7அவருடைய கரங்களின் செயல்கள் உண்மையும் நீதியுமானவை; அவருடைய ஒழுங்குவிதிகள் அனைத்தும் நம்பத்தகுந்தவை.
8அவை என்றென்றும் உறுதியானவை; உண்மையுடனும், நேர்மையுடனும் கொடுக்கப்பட்டவை.
9அவர் தமது மக்களுக்கு மீட்பைக் கொடுத்தார்; அவர் தம் உடன்படிக்கையை என்றென்றுமாய் நியமித்திருக்கிறார்; பரிசுத்தமும் மற்றும் பயபக்தி என்பது அவருடைய பெயராயிருக்கிறது.
10யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய ஒழுங்குவிதிகளைப் பின்பற்றும் அனைவருக்கும் நற்புத்தியுண்டு. நித்தியமான துதி அவருக்கே உரியது.
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.