
சங்கீதம் 11
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
அத்தியாய சுருக்கம்
சமூக அடித்தளங்கள் பாழானதாகத் தோன்றும்போது சங்கீதம் 11 பீதியை நிராகரிக்கிறது. சங்கீதக்காரன் அடைக்கலத்தில் தங்கி, மனித நடத்தை சோதிக்கப்படுகிறது என்றும் நீதியான நீதி இறுதியில் வன்முறையையும் ஏமாற்றையும் எதிர்கொள்கிறது என்றும் நம்புகிறான்.
அடைக்கலம்தைரியம்நீதிசோதனை
1நான் யெகோவாவிடத்தில் தஞ்சமடைகிறேன். அப்படியிருக்க நீங்கள் என்னிடம் எப்படி இவ்வாறு சொல்லமுடியும்: “ஒரு பறவையைப்போல உன்னுடைய மலைக்குத் தப்பிப்போ.
2பாருங்கள், கொடியவர்கள் தங்கள் வில்லுகளை வளைக்கிறார்கள்; நேர்மையான இருதயம் உள்ளவர்மேல் இருளிலிருந்து எய்வதற்காக தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்.
3அஸ்திபாரங்கள் அழிக்கப்படும்போது, நீதிமான்கள் என்ன செய்யமுடியும்?”
4யெகோவா தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; யெகோவா தமது பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் மனுமக்களை உற்று நோக்குகிறார்; அவருடைய கண்கள் அவர்களை ஆராய்ந்து பார்க்கின்றன.
5யெகோவா நீதிமான்களை ஆராய்ந்தறிகிறார்; வன்முறைகளை விரும்புகிற கொடியவர்களையோ, அவர் மனதார வெறுக்கிறார்.
6அவர் கொடியவர்களின்மேல் நெருப்புத் தணல்களையும், எரியும் கந்தகத்தையும் பெய்யப்பண்ணுவார்; வறட்சியான காற்றே அவர்களின் பங்காயிருக்கும்.
7யெகோவா நீதியுள்ளவர், அவர் நீதியை நேசிக்கிறார்; நேர்மையான மனிதர் அவர் முகத்தைக் காண்பார்கள்.
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.