Joyful families, musicians, shepherds, and harvest bearers enter Jerusalem's open gates together

சங்கீதம் 100

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
அத்தியாய சுருக்கம்
சங்கீதம் 100 பூமி முழுவதையும் மகிழ்ச்சியான சேவைக்கும், மகிழ்ச்சியான பாடலுக்கும், நன்றியுள்ள பரிசுத்த ஸ்தல முற்றங்களுக்கும் அழைக்கிறது. நன்மை, உறுதியான அன்பு, உண்மை ஒவ்வொரு தலைமுறையிலும் நீடிக்கும் படைப்பாளரும் மேய்ப்பனும் சொந்தமாக இருப்பதில் வழிபாடு தங்குகிறது.
நன்றிமகிழ்ச்சிசொந்தம்உண்மை
1பூமியிலுள்ளவர்களே, எல்லோரும் மகிழ்ச்சியுடன் யெகோவாவை ஆர்ப்பரியுங்கள்.
2மகிழ்ச்சியுடன் யெகோவாவை வழிபடுங்கள், மகிழ்ச்சிப் பாடல்களோடு அவர்முன் வாருங்கள்.
3யெகோவாவே இறைவன் என்று அறியுங்கள். அவரே நம்மை உண்டாக்கினார், நாம் அவருடையவர்கள்; நாம் அவருடைய மக்கள், அவருடைய மேய்ச்சலின் ஆடுகள்.
4அவருடைய வாசல்களில் நன்றியோடும், அவருடைய ஆலய முற்றங்களில் துதியோடும், உட்செல்லுங்கள் அவருக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரைத் துதியுங்கள்.
5யெகோவா நல்லவர், அவருடைய அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது; அவருடைய உண்மை எல்லாத் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து வருகிறது.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.