Bildad speaking beneath a vast night sky and dimmed moon

யோபு 25

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
அத்தியாய சுருக்கம்
பில்தாத் கடவுளின் ஆதிக்கத்தையும் ஆகாயத்தின் எண்ணற்ற படைகளையும் பற்றி ஒரு குறுகிய இறுதி உரையை வழங்குகிறான், அவற்றின் முன் உயரங்களில் அமைதி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சந்திரனும் நட்சத்திரங்களும் கூட கடவுளின் பார்வையில் தூய்மையாக இல்லாவிட்டால், பெண்ணிலிருந்து பிறந்த ஒரு புழுவான மனிதன் எப்படி நீதியுள்ளவனாக இருக்க முடியும் என்று அவன் கேட்கிறான்?
பில்தாத்தெய்வீக ஆதிக்கம்மனித பலவீனம்பிரபஞ்சம்
1அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னதாவது:
2“ஆளுகையும், பிரமிக்கத்தக்க பயமும் இறைவனுக்கே உரியது; அவரே பரலோகத்தின் உயரங்களில் சமாதானத்தை நிலைநாட்டுகிறவர்.
3அவருடைய படைவீரர்களை எண்ணமுடியுமோ? அவருடைய ஒளி யார்மேல் உதிக்காமல் இருக்கிறது?
4அப்படியிருக்க ஒரு மனிதன் இறைவனுக்கு முன்பாக நேர்மையானவனாக நிற்பதெப்படி? பெண்ணிடத்தில் பிறந்தவன் தூய்மையாய் இருப்பதெப்படி?
5அவருடைய பார்வையில் சந்திரன் பிரகாசம் இல்லாமலும், நட்சத்திரங்கள் தூய்மையற்றதாயும் இருக்கும்போது,
6பூச்சியாயிருக்கும் மனிதனும், புழுவாயிருக்கும் மனுமகனும் எவ்வளவு அற்பமானவர்கள்!”

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.