Bildad speaking beside an imagined landscape of traps and darkness

யோபு 18

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
அத்தியாய சுருக்கம்
பில்தாத் யோபு அவர்களை முட்டாள் மாடுகளாக நடத்துகிறான் என்று புகார் செய்து, தீயவனின் முடிவை உயிரோட்டமான வரிகளில் வரைகிறான். அவனுடைய விளக்கு அணைந்துவிடுகிறது, ஒவ்வொரு அடியிலும் பொறிகள் காத்திருக்கின்றன, பயங்கரம் அவனை பின்னால் இருந்து வேட்டையாடுகிறது, நோய் அவன் தோலைத் தின்கிறது, நெருப்பு அவன் கூடாரத்தில் அமர்கிறது, அவன் பெயரை சுமக்க எந்த சந்ததியும் விடப்படவில்லை.
பில்தாத்தீயவன்தீர்ப்புபயங்கரம்
1அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னது:
2“நீ எப்பொழுது இந்தப் பேச்சுக்களை நிறுத்துவாய்? நிதானமாயிரு, அப்பொழுது நாங்கள் பேசுவோம்.
3உன் பார்வையில் நாங்கள் மிருகங்களைப்போல கருதப்பட்டு மதியீனர்களாய் எண்ணப்படுவது ஏன்?
4உன் கோபத்தில் உன்னையே காயப்படுத்துகிறவனே, உனக்காக பூமி கைவிடப்படுமோ? பாறை தன் இடத்தைவிட்டு நகருமோ?
5“கொடியவனின் விளக்கு அணைக்கப்படுகிறது; அவனுடைய நெருப்புச் சுவாலையும் எரியாமல் போகிறது.
6அவனுடைய கூடார வெளிச்சம் இருளாகிறது; அவனுடைய விளக்கும் அணைந்து போகிறது.
7அவனுடைய நடையின் கம்பீரம் பலவீனமடைகிறது; அவனுடைய சுயதிட்டங்கள் அவனைக் கீழே வீழ்த்துகின்றன.
8அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு, அந்த வலையின் சிக்கலிலே நடக்கிறான்.
9பொறி அவன் குதிகாலைப் பிடிக்கிறது; கண்ணி அவனை இறுக்கிப் பிடிக்கிறது.
10சுருக்கு அவனுக்காகத் தரையிலும், பொறி அவன் பாதையிலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
11எப்பக்கத்திலும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி, அவன் கால்களை அலையவைக்கும்.
12பேரழிவு அவனுக்காக காத்திருக்கிறது; பெருங்கேடு அவன் விழும்போது ஆயத்தமாக இருக்கிறது.
13வியாதி அவன் தோலைத் தின்கிறது; சாவின் முதற்பேறு அவன் அங்கங்களை விழுங்குகிறது.
14அவன் தன் கூடாரத்தின் பாதுகாப்பிலிருந்து பிடுங்கப்பட்டு, பயங்கரங்களின் அரசனிடம் கொண்டுபோகப்படுகிறான்.
15அவனுடைய கூடாரத்தில் நெருப்பு குடியிருக்கும்; அவனுடைய உறைவிடங்களில் கந்தகம் வாரி இறைக்கப்படும்.
16கீழே அவனுடைய வேர்கள் காய்ந்து போகின்றன; மேலே அவனுடைய கிளைகள் வாடிப்போகின்றன.
17அவனைப் பற்றிய நினைவு பூமியிலிருந்து அற்றுப்போகிறது; மண்ணில் அவனுக்குப் பெயர் இல்லாதிருக்கிறது.
18அவன் வெளிச்சத்திலிருந்து இருளுக்குள் தள்ளப்படுகிறான்; உலகத்திலிருந்தும் துரத்தப்படுகிறான்.
19அவனுடைய மக்கள் மத்தியில் அவனுக்கு சந்ததிகளே இல்லை, அவன் வாழ்ந்த இடத்தில் மீதியாயிருப்பவன் ஒருவனும் இல்லை.
20அவன் முடிவைக்கண்டு மேற்கிலுள்ளோர் நடுங்கினர்; அவன் காலத்திற்கு பின்பு வாழ்ந்த கிழக்கிலுள்ளோர் திகிலுற்றனர்.
21தீயவனின் குடியிருப்பு இத்தகையதே; இறைவனை அறியாதவனின் இருப்பிடமும் இத்தகையதே.”

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.