
எரேமியா 45
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
அத்தியாய சுருக்கம்
எரேமியாவின் வார்த்தைகளை பதிவு செய்யும்போது தான் சுமக்கும் துயரத்தையும் சோர்வையும் பாரூக் புலம்புகிறார். முழு நிலமும் எழுச்சியை எதிர்கொள்கிறது என்று கடவுள் அவருக்கு நினைவூட்டி, தனக்காக மகத்துவத்தை தேட வேண்டாம் என்று கூறி, அவர் எங்கு சென்றாலும் அவரது வாழ்க்கை பாதுகாக்கப்படும் என்று வாக்குறுதி செய்கிறார்.
பாரூக்பணிவுசோர்வுபாதுகாப்பு
1யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீம் அரசாண்ட நான்காம் வருடத்தில், இறைவாக்கினனான எரேமியா நேரியாவின் மகன் பாரூக்குக்குச் சொன்னதாவது: எரேமியா சொல்லச்சொல்ல, பாரூக் அவைகளைப் புத்தகத்தில் எழுதிய பின்பே இச்செய்தி கிடைத்தது:
2“பாரூக்கே! இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா உனக்குக் கூறுவது இதுவே:
3நீயோ, ‘ஐயோ! எனக்குக் கேடு, யெகோவா என்னுடைய வேதனையுடன், துக்கத்தையும் சேர்த்திருக்கிறாரே; நான் துக்கத்தின் அழுகையினால் இளைப்படைந்தேன். ஆறுதலையும் நான் காணவில்லை’ என்று சொன்னாய்.
4அதற்கு யெகோவா, இதை அவனுக்குச் சொல் என்கிறார். ‘யெகோவா கூறுவது இதுவே: நாடெங்கும் நான் கட்டியிருப்பதை கவிழ்த்துப் போடுவேன். நான் நாட்டினதை வேரோடு பிடுங்குவேன்.
5அப்படியிருக்கையில் நீ உனக்கென்று பெரிய காரியங்களைத் தேடவேண்டுமோ? நீ அவைகளைத் தேடவேண்டாம். ஏனெனில் நான் எல்லா மக்கள்மேலும் அழிவைக் கொண்டுவரப் போகிறேன் என்று யெகோவா அறிவிக்கிறார். ஆனாலும் நீ எங்கே போகிறாயோ அங்கெல்லாம் உன்னை உயிருடன் தப்பவிடுவேன்’ என்றார்.”
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.